நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த தீர்த்தத் திருவிழா அன்று-அமரர் முருகேசு கோபாலபிள்ளை அவர்களின் நினைவாக- நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தின் முன்னாள் வைத்து-நயினை மண்ணின் மைந்தர்கள் சிலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பரிஸ் லாசப்பல் பகுதியில் இயங்கும் பிரபல வர்த்தக நிலையங்களான,எம்.ஜி.எஸ்-எம்.ஜி.ஆர் மற்றும் அகிலன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் மற்றும் அன்னாரின் உறவினர்களுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டு -மண்ணின் மைந்தர்களை கௌரவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-நயினை எம்.குமரன்