தீவகம் மண்கும்பானில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்-ஸ்ரீ முத்துமாரி (கருப்பாத்தி) அம்மனின் வருடாந்த,ஆடிப்பூரத் திருவிழா கடந்த 26.07.2017 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
பகல் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு விஷேட நாதஸ்வரக் கச்சேரியும் அதனைத் தொடர்ந்து முத்துமாரி (கருப்பாத்தி) அம்மன் அழகிய முத்துச்சப்பரத்தில் வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.
அன்றைய தினம் பகல் திருவிழாவின் பின் அடியவர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால்,முழுமையாக பதிவு செய்யப்பட்ட-முத்துமாரி (கருப்பாத்தி) அம்மனின் பகல்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை -உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.