தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  14.07.2017 வெள்ளிக்கிழமை  அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-22.07.2017 சனிக்கிழமை  அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 23.07.2017  ஞாயிற்றுக்கிழமை  ஆடிஅமாவாசை அன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெற்றது. 

வேலணை வங்களாவடி முருகப்பெருமானின்  வருடாந்த மகோற்சவத்தின் தேர் மற்றும் தீர்த்தம் ஆகிய இரு திருவிழாக்கள்  முழுமையாக- அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து  வந்துள்ளோம்.

கடந்த சனிக்கிழமை  (22.07.2017) அன்று  காலை   நடைபெற்ற-வருடாந்த தேர்த்திருவிழாவின்  முழுமையான நிழற்படத் தொகுப்பு மற்றும் வீடியோப் பதிவு என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அனுசரணை வழங்கிய நிறுவனம்….

பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் –  வேலணையைச் சேர்ந்தவரினால் நடத்தப்பட்டு வரும்-  நாணயமாற்று நிறுவனங்களின் உரிமையாளரே-வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்தமகோற்சவத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளார்- என்பதனை   அறியத் தருகின்றோம்.

 

Leave a Reply