யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா-07-07-2017 வெள்ளிக்கிழமை  அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை  காலை நடைபெற்ற பெருநாள் விழாவுடன் நிறைவடைந்தது.

இம்முறை   யாழ் மறைமாவட்ட  ஆயர் மேதகு  ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும்- பல நூற்றுக்கணக்கான  புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும்- எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
 
வழமை போல அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா இம்முறையும் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் முழுமையான நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டுள்ளோம்.
கீழே வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
விஷேட தகவல்..
அல்லையூர் இணையத்தின் அனுசரணையில்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு-ஆலய பராமரிப்புக்காக, பிரான்ஸில் திரட்டப்பட்ட (இரண்டு லட்சம் ரூபாக்களை)-ஆலய மூப்பரும்,ஆலயத்தை பராமரித்து  வருபவருமாகிய,பெரியவர் அல்பிரட் யோர்ச் அவர்களிடம்-பண்டிதர் கலாநிதி  திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் நேரடியாகச் சென்று ஒப்படைத்தார்.
1430 ஈரோக்கள் திரட்டப்பட்டன.
10  ஈரோக்கள் முதல் 100 ஈரோக்கள் வரை 24 பேர் வழங்கினார்கள்.ஏற்றத்தாழ்வுகளை தவிர்க்கும் முகமாக நிதி வழங்கியவர்களின் பெயர்களை மட்டும் பதிவு செய்ததுடன்-கணக்கு விபரங்களை நிதி திரட்டிய-திரு அலெக்சாண்டர் அன்ரன்-திரு உமாபதிசிவம்-திரு  பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் ஆகியோரின் கவனத்திற்கு  சமர்ப்பித்துள்ளோம்.
2 லட்சம்  ரூபாக்கள்  ஆலய மூப்பரிடம் வழங்கப்பட்டதுடன்-மிகுதி பெருநாள் விழாவிற்கான வீடியோப்பதிவு-நிழற்படப்பதிவு-பனர்-இதர போக்குவரத்துச் செலவு என்பவற்றிக்கு பயன்படுத்தப்பட்ட விபரங்கள் அனைத்தும் உரியவர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மதவேறுபாடின்றி – வருடந்தோறும் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாளுக்கு நிதி வழங்கி வரும் அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply