நெடுந்தீவில் கால்நடைகளின் தாகத்தை தீர்த்து வைத்த, லங்காசிறி இணையம் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

நெடுந்தீவில் கால்நடைகளின் தாகத்தை தீர்த்து வைத்த, லங்காசிறி இணையம் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குடிக்க தண்ணீர் இன்றி  கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை 10 குதிரைகள் உயிரிழந்துள்ளன என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலேயே குதிரைகள் காணப்படுகின்றன. இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் அவற்றைப் பார்த்துச் செல்கின்றனர். குதிரைகளைப் பராமரிப்பதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை.

தற்போது லங்காசிறி இணைய நிர்வாகத்தின் நிதி அனுசரணையில்-  வறண்டு கிடந்த தண்ணீத் தொட்டிகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக ஏழு நாட்களுக்கு இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

தீவகம் நெடுந்தீவில், கடும் வறட்சியால் நாள்தோறும் உயிரிழக்கும் குதிரைகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை 10 குதிரைகள் உயிரிழந்துள்ளன என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலேயே குதிரைகள் காணப்படுகின்றன. இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் அவற்றைப் பார்த்துச் செல்கின்றனர். குதிரைகளைப் பராமரிப்பதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை.

குதிரைகளை அழிவிலிருந்து காப்பற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இதன் விளைவாக நாளாந்தம் ஒரு குதிரை வீதம் உயிரிழந்து – அழிந்து  கொண்டிருக்கின்றன. குதிரைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், அவற்றைப் பேணவும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நெடுந்தீவு மக்கள் கோருகின்றனர்.

நெடுந்தீவுப் பகுதியில் குதிரைகளுக்கான லயம் காணப்படுகின்றது. தற்போதைய வறட்சியைக் குதிரைகள் எதிர்கொள்ளமுடியாது அந்தரித்துத் திரிகின்றன. மேய்ச்சலுக்குப் புல் இல்லாததோடு குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லாததால் இதுவரை சுமார் 10 இற்கும் மேற்பட்ட குதிரைகள் உயிரிழந்துள்ளன.

குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதுவரையில் எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என்று பொது மக்கள் கவலையுடன் விசனமும் தெரிவிக்கின்றனர்.

குதிரை லயம் உள்ள குதிரைகளுக்கும் உரிய பராமரிப்பு இல்லை. எஞ்சியுள்ள குதிரைகளும் உயிரிழந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரச திணைக்களங்கள் உரிய நடவடிக்கை களை மேற்கொண்டு குதிரைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை உரிய முறை யில் பராமரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“நெடுந்தீவில் வருடாந்தம் வறட்சியான காலநிலை காரணமாக ஒரு சில குதிரைகள் இறப்பது வழமை. இந்தப் பிரதேசத்தில் உள்ள குதிரைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றபோதிலும் காலநிலையில் ஏற்படுகின்ற மாற்றம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக ரித்துள்ளது.

ஆகவே நாமும் அதற்கேற்ற வகை யில் முயற்சிகளை எடுக்கவேண்டியுள்ளது டன் அதில் பெரும் சவாலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந் தெரிவித்தார். “வருடாந்தம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வறட்சி காரணமாகக் குதிரை கள் இறப்பது வழமையாக காணப்படுகின் றது. நாம் குதிரைகளுக்காகக் குடிப்பதற்குத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகிறோம்.

நாளாந்தம் எம்மால் நீரை வழங்க முடியாது போனாலும் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒருதடவையேனும் குடிதண்ணீரை வழங்கி வருகின்றோம். குதிரைக் குட்டிகள் பெரும்பாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக இறக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

குதிரைகளை அழிவிலிருந்து பாதுகாக்க வனவளத் திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

 

Leave a Reply