உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது…நயினை நாகபூசணி அம்மன் முன்றலில் கலைமாமணி சீர்காழி சிதம்பரத்தின் இசைக்கச்சேரி- வீடியோ இணைப்பு!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது…நயினை நாகபூசணி அம்மன் முன்றலில் கலைமாமணி சீர்காழி சிதம்பரத்தின் இசைக்கச்சேரி- வீடியோ இணைப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை  நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின்  13ம் நாள்  07.07.2017 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத்திருவிழா அன்று-தென் இந்தியப் பாடகர்  கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிதம்பரம் அவர்களின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. நீண்ட காலத்தின் பின் இடம்பெற்ற இசைக்கச்சேரியினைக் கண்டுகளிக்க பெருமளவான பக்தர்கள் நயினை அன்னையின் முன்றலில் குவிந்தனர் என்று தெரிய வருகின்றது.

நயினை  நாகபூசணி அம்மன் முத்துச் சப்பறத்தில் அமர்ந்து வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான  வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux