யாழ் மண்டைதீவின் கிழக்குக்கடற்கரையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்-காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் சிறப்புமிக்க வருடாந்த பொங்கல் விழாவை முன்னிட்டு-07.07.2017 வெள்ளிக்கிழமை மாலை கண்ணகை அம்மன் கிராம வலம் வந்த கண்கொள்ளாக்காட்சியும்-முத்தரிசித்தண்டலும் சிறப்பாக இடம்பெற்றது.
நாளை 10.07.2017 திங்கட்கிழமை அன்று அம்மனுக்கான வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
நிழற்பட உதவி….வலைப்பூ நண்பர்கள்