யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.![]() அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை யோகம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பாலினி, பாலேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும், ஜெபநேசன், விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆரணியா, அபிநயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அனுஷன், அனுஷியா, அபிஷன் ஆகியோரின் அப்பம்மாவும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர்- யாழ். மாவட்ட செயலகம்), அன்னலட்சுமி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, இராசலட்சுமி(மண்டைதீவு), காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராசையா, இராஜேஸ்வரி, நல்லையா, இலட்சுமி, தங்கமுத்து, வெற்றிவேலு, மற்றும் பரமலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 03-07-2017 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டும், பிற்பகல் 13:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 14:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பொ. பாலசிங்கம் (கணவன்) |
தொடர்புகளுக்கு | ||||
|