அல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

அல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-02.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தாயகத்தில் சில அறப்பணி  நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01-நயினாதீவு  நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனையும்,அமுத சுரபி அன்னதான சபைக்கு நிதியும் வழங்கப்பட்டது.

02.யாழ் வில்லூண்டிப் பிள்ளையார் கோவிலில் -திரு சிவா செல்லையாவின் பாடசாலை நண்பரும்,பூசகருமான திரு திருஞானசம்பந்தர் ஜெயராஜா அவர்களினால் விஷேட பூஜை ஒன்று நடத்தப்பட்டது.

03-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் திரட்டப்பட்ட நிதி -சிவா செல்லையாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.(இது பற்றிய விபரங்கள் பின்னர் விரிவாக இணைக்கப்படும்)

04-முல்லைதீவில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

05-வவுனியா மரக்காளம்பளை காளியம்மன் ஆலயத்தில் மதிய விஷேட பூஜையும்-அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

06-மிருசுவிலில் அமைந்துள்ள HOLY சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

07-வடமாராட்சி மருதங்கேணியில் ஒரு பாடசாலை மாணவர்களுடன் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இவை அனைத்துக்குமான நிதி அனுசரணையினை-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்கள் நேரடியாக வழங்கியிருந்தார்.

எங்கள் கிராமமாகிய ‘அல்லைப்பிட்டி’ மண் பெற்றெடுத்த பெறுமதியான முத்துக்களில் ஒன்று. 
வாழ்வில் வெல்வதற்கு உயர் கல்வித்  தகைமையோ, பெரிய பொருளாதாரப் பின்புலமோ தேவையில்லை என்று எனக்கு உணர்த்திய என் ஊரவர்களில் ஒருவர்.
உறவு முறையில் எனக்கு ‘சிறிய தந்தையாக’ இருப்பினும் 5 வயது மட்டுமே வேறுபாடு என்பதன் காரணமாக என்னை அன்றுமுதல் இன்றுவரை ஒரு ‘நண்பனாகவே’ நடத்தி வருபவர். 
தனிப்பட்ட உரையாடல்களில் எல்லாம் என்னால் ‘சித்தப்பு’ என்றும், ‘குஞ்சியப்பு’ என்றும் நகைச்சுவையாக அழைக்கப் படுபவர்.
எங்கள் ஊருக்கும் எனக்கும் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை ‘அல்லையூர்’ மக்களையும் இணைக்கும் ஒரு உறவுப் பாலம்.
அறப்பணியில் எனக்கு வியப்பைத் தரும் ஒரு ஆதர்ச வழிகாட்டி.
யாழ் நகரில் இருந்து 4 கல் தொலைவில் இருந்தும் ஏனைய பிரதேச மக்களின் கண்ணில் படாமல் கிடந்த, ஏறக்குறைய ‘பின் தங்கிய கிராமம்’ எனக் கணிக்கப் பட்ட, இரண்டாயிரத்திற்குப் பின்னர் இரு தடவை ‘இரத்த ஆற்றில்’ குளித்த என் ஊரை ‘அல்லையூர்’ என்ற இணையம் வாயிலாகவும், ‘அல்லைப்பிட்டி மக்கள்’ என்ற முகநூல் பக்கம் வாயிலாகவும் உலக அரங்கில் முன் நிறுத்திய சாதனையாளன். ஏனைய கிராம மக்களுக்கும் ஒரு வழிகாட்டி. ஐரோப்பிய மண்ணின் ‘பரபரப்பு’ நிறைந்த வாழ்விற்கு மத்தியில் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாசகத்தை கடந்த 7 வருடங்களாக இறுகப் பற்றி அதன் வழியே வாழ்ந்து வரும் என் அன்புக்குப் பாத்திரமான என் சிறிய தந்தையாராகிய சிவா செல்லையா அவர்கள் வாழ்வில் “கன்றாத வளமையும் குன்றாத இளமையும், கழுபிணி இல்லாத உடலும்” பெற்று நீடூழி காலம் வாழ்க என்று வாழ்த்துவதோடு அவரது அறம் சார்ந்த பணிகளுக்கு என்றென்றும் துணை நிற்குமாறு எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்திகளை, என் அன்னை அபிராமியை உளமார வேண்டி நிற்கிறேன்.
“ஒன்று பட்டு உயர்வோம்”
மிக்க அன்புடன் <3
‘அல்லையூரின் மைந்தர்களில் ஒருவன்’
இரா.சொ.லிங்கதாசன்
-நிர்வாகி-
அந்திமாலை இணையம்
www.anthimaalai.dk
டென்மார்க்

Leave a Reply