தீவகத்தில் பசுக்களின் கொலைகளைக் கண்டித்து-புங்குடுதீவில் இடம்பெற்ற,கண்டனப் பேரணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பசுக்களின் கொலைகளைக் கண்டித்து-புங்குடுதீவில் இடம்பெற்ற,கண்டனப் பேரணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,சமூக விரோதிகளால் தொடர்ந்து கால்நடைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு வரும் நிலையில்-தற்போது புங்குடுதீவுப்பகுதியில் பெருமளவான பசுமாடுகளை-வெளியிடங்களிலிருந்து வரும் சமூக விரோதிகளுடன்-உள்ளூர் சமூக விரோதிகள் சிலர் இணைந்து  வேட்டையாடுவதைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

புங்குடுதீவு மக்களினால்,  மிருக வதைக்கு எதிராக நடத்தப்பட்ட-இக் கண்டனப்பேரணி    03.07.2017 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் இடம்பெற்றது.

பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வேலணை பிரததேச சபை தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் பேச்சுக்கள்  நடாத்தப்பட்டு- வளர்ப்பு மாடுகளை ஏலத்தில்  விற்பனை செய்வதை தடுத்து-மாட்டு  உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. 
அத்துடன் மிருகவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடை வைத்திய அதிகாரியை வரவளைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்-மேலும் இரு  மாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கண்டனப் பேரணிக்கு புங்குடுதீவு  தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர்   மற்றும் சனசமூக நிலைய உறுப்பினர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் – ஆலய மதகுரு  உட்பட பொதுமக்களும் ஆதரவு வழங்கியதாக தெரிய வருகின்றது. 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux