மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 14.06.2017 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று-கடந்த 22.06.2017 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெற்றது.
மண்டைதீவு முகப்புவயல் முருகன் தேரேறி வரும் காட்சியினை கண்டு மகிழ-வெளியிடங்களிலிருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்…
கனடாவில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த ,மண்மறவாத மனிதரும்-சமூக ஆர்வலருமாகிய,எங்கள் அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால், முழுமையாக வீடியோப் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
வருந்துகின்றோம்…
கடந்த சில நாட்களாக-எமது வலையமைப்பின் இணைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக-புதிய செய்திகள் இணைக்கப்படவில்லை என்பதனை வருத்தத்தோடு அறியத்தருகின்றோம். இனி வழமைபோல செய்திகள் வெளிவரும்.