அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயப் பெருவிழா அறிவித்தலும்-அவசர உதவி கோரலும் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா 07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.16-07-2013 செவ்வாய்கிழமை அன்று காலை அன்னையின் பெருநாள் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை யாழ் மாவட்ட ஆயர் திரு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில்  கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருகைதந்து அன்னையின் ஆசீர்வாதம் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

தற்போது ஆலயத்தின் பின்புறமுள்ள கட்டிடத்தை புனரமைக்கும் பணிகளை பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்கள் முன்னின்று நடத்தி வருகின்றார். இப்பணிகளுக்கு மேலும் நிதி பற்றாக்குறையாக உள்ளதனால்-புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் தம்மாலான நிதி பங்களிப்பினை செய்ய முன்வர வேண்டும் என்ற அன்பான வேண்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்துடன் அல்லது பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்களுடனோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!
16-
மஅ

Leave a Reply