லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு-படங்கள் இணைப்பு!

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு-படங்கள் இணைப்பு!

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

“இந்த சம்பவம் பற்றி முழு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட லண்டன் பிரதர் திரேசா மே தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை  100 ஐ விட அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த 24 பேர் தற்போதும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு தன்னுடைய நினைவுகளும், பிரார்த்தனைகளும் இருப்பதாக சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரித்தானிய இளசவரசி எலிசபெத் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply