இலங்கையின் வடபகுதியில்,என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள வீதி விபத்துக்களால்,பெறுமதிமிக்க மனித உயிர்கள் தினமும் பலியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 13.06.2017 செவ்வாய்கிழமை மட்டும் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்குண்டு இருவர் பலியாகியதுடன் பலர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமாலையில் இடம்பெற்ற-இவ்விபத்தில் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த தாயும்,மகனும் பலியாகியிருப்பதாக மேலும் தெரிய வருகின்றது. மிதவேகம்-போதைவஸ்து பாவனை போன்றவையே -இடம்பெறும் விபத்துக்களுக்கான முக்கிய காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.