தீவகத்திலிருந்து அருளாட்சி புரியும்-நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்திலிருந்து அருளாட்சி புரியும்-நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தின், ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க – ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகேஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் -நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின்  வருடாந்த மஹோற்சவ பெருவிழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை  அன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது என்பதனை உலகமெல்லாம் பரந்து வாழும் -நயினை அன்னையின் பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்.

25.06.2017 ஞாயிறு அன்று பகல் 12 மணிக்கு கொடியேற்றமும்,

29.06.2017 வியாழக்கிழமை அன்று முத்துச்சப்பறமும்,

01.07.2017  சனிக்கிழமை அன்று திருக்கயிலைக் காட்சியும்,
04.07.2017  செவ்வாய்க்கிழமை அன்று திருமஞ்ச திருவிழாவும்,
07.07.2017 (வெள்ளிக்கிழமை) இரவு சப்பறத் திருவிழாவும்
08.07.2017 (சனிக்கிழமை) அகிலாண்டேஸ்வரிக்கு தேர் உற்சவமும்
09.07.2017 ஞாயிற்றுக் கிழமை. புனித கங்காதரணி தீர்த்தக்கரையில் தீர்த்தோற்சவமும். இடம்பெற்று மறுநாள்
10.07.2017 திங்கள்  இரவு தெப்போற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும்.


இலங்கையின் கடல் சூழ்ந்த தீவாகிய நயினாதீவில் அழகொழுக வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உயர்திருவிழாவிலே அன்னையடிவர்கள் வருகைதந்து அன்னையவள் திருவருட்கடாட்சத்தினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்..

அல்லையூர் இணையத்தில்…

இம்முறை  நயினைத்தாயின் அருளுடன்-மகோற்சவத்திருவிழாக்கள் அனைத்தையும்-அல்லையூர் இணையத்தின் ஊடாகவும்-முகநூல் ஊடாகவும்-உலகமெல்லாம் பரந்து வாழும் பக்தர்களின் பார்வைக்கு வீடியோ மற்றும் நிழற்படப்பதிவாக-எடுத்துவரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

Leave a Reply