மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிஷேக விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிஷேக விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய  கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா 29.05.2017 திங்கட்கிழமை அன்று  வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் 2015 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு-சிறப்பாக முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின்(மாதாச்சி ஆலயம் )இன்று அழகாக காட்சியளிப்பது தமக்கு பெருமகிழ்வைத் தருவதாக  மண்டைதீவு மக்கள் இன்று மகிழ்வுடன் கூறுகின்றனர்.

சங்காபிஷேக விழாவினைத் தொடர்ந்து-சிறப்பு அன்னதான நிகழ்வும்  இடம்பெற்றது. இதற்கான அனுசரணையினை-சுவிஸில் வசிக்கும்-மண்டைதீவைச்  சேர்ந்த திரு சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரன் அவர்கள் வழங்கியதாக மேலும் தெரியவருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux