அல்லைப்பிட்டி றோமன் .க.த.க வித்தியாலயத்தில் நீண்ட காலம் ஆசிரியையாகவும்,பின்னர் அதிபராகவும் கல்விப்பணியாற்றி ஓய்வு பெற்ற-கனடாவில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த , திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்தி ரீச்சர்) அவர்களை கடந்த 12.05.2017 வெள்ளிக்கிழமை அன்று -தற்போதைய , அல்லைப்பிட்டி றோமன் .க.த.க வித்தியாலய சமூகம் பாராட்டி கௌரவித்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-இந்நிகழ்வில்-சிறப்பு விருந்தினராக ,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களும்-மற்றும் சமூக ஆர்வலரும் ,திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் அவர்களின் சகோதரருமாகிய திரு இ.கேதாரநாதன் அவர்களும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.