யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா செல்வரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 17.05.2017 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்கும்பான் சிவகாமி அம்மனை வேண்டி நிற்கும்.
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்-உறவினர்கள்.
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை, யாழ். மண்கும்பான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி) 17.05.2017 புதன்கிழமை அன்றாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கும்.
தாய்-கணவர்-பிள்ளைகள்-உறவினர்கள்.
அன்னார்களது நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-17.05.2017 புதன்கிழமை அன்று-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.