வேலணை ஒன்றியம் பிரித்தானியா கிளையினால், வேலணை மருத்துவமனைக்கு நோயாளர் கட்டில்கள் அன்பளிப்பு-விபரங்கள் இணைப்பு!

வேலணை ஒன்றியம் பிரித்தானியா கிளையினால், வேலணை மருத்துவமனைக்கு நோயாளர் கட்டில்கள் அன்பளிப்பு-விபரங்கள் இணைப்பு!

வேலணை ஒன்றியம் பிரித்தானியா வாழ் மக்களால் வேலணை பிரதேச மருத்துவமனைக்கு 930000.00 ரூபா பெறுமதியான அவசர நோயாளர் கட்டில்கள் மூன்று அன்பளிப்பு  செய்யப்பட்டுள்ளது.

வேலணை ஒன்றியத்தால் 930000 . 00 ரூபா பெறுமதியான மூன்று அவசர நோயாளர் படுக்கையும்- அதனுடன் கூடிய டிஜிற்றல் கண்கானிப்பு திரையுடன் கூடிய உபகரணங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.ஒரு கட்டிலின் பெறுமதி 310000 .00 ரூபாக்கள் ஆகும்.  

வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரின் வேண்டு கோளுக்கமைவாகவே- வேலணை ஒன்றியம் பிரித்தானியா நிறுவனத்தினரால்  10-05-2017 புதன்கிழமை காலை 10*30மணிக்கு உத்தியோக பூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்டப் பணிப்பாளர் வேலணைப் பிரதேச மருத்துவமனையின் மருத்துவர்கள் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் வேலணை ஒன்றியத்தின் பிரித்தானியா நிர்வாகத்தினருடன்_வேலணைக் கிளையின் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux