வவுனியாவில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய யானை-வீடு, உடமைகள் சேதம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வவுனியாவில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய யானை-வீடு, உடமைகள் சேதம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வவுனியா   பறநட்டகல் பிரதேசத்தில்  (06.05.2017)  சனிக்கிழமை  நள்ளிரவில்  புகுந்த  யானை ஒன்று  மேற்படி பிரதேசத்தில் அமைக்கபட்டிருந்த  வீடொன்றின்  மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

குறித்த கிராமத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று  விவசாய நடவடிக்கைகளுக்காக அமைக்கபட்டிருந்த   வீட்டினுள் அத்து மீறி நுழைந்து   அங்கு இரவு காவல் கடமையில் இருந்த காவலாளியின் உடமைகளை சேதப்படுத்தியதுடன் வீட்டையும்  சேதப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வவுனியா – ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட அம்மிவைத்தான் கிராமத்தில் புகுந்த யானை மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்தமாதம் யானை ஒன்று சுட்டு கொல்லபட்ட சம்பவத்தின் பின்னர் மேற்படி பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானை தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தின்   மத்தியில் இரவுபொழுதை கழிக்க வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

Leave a Reply