அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்  (மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி பஞ்ச தர்ம கர்த்தா)அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-06.05.2017 சனிக்கிழமை அன்று-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

இங்கு மூன்று பிரிவுகளில் 410 மாணவ மாணவிகள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வரும் 08.05.2017 திங்கட்கிழமை அன்று-யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் சிறப்பு  நிகழ்வு  ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-மண்டைதீவு கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux