புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலியும்-  இரு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்-படங்கள் இணைப்பு!

புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலியும்- இரு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்-படங்கள் இணைப்பு!

தீவகம்  புங்குடுதீவு 5ம்  வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் 25 வது  ஆண்டு நினைவு தினத்தை (திதி) முன்னிட்டு 28.04.2017  வெள்ளிக்கிழமை அன்று -கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு காலை சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.

இவ்விரு சிறப்புணவு வழங்கிய நிகழ்வுகளில் -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,இரு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux