அல்லையூர் இணையத்தின் 225 வது சிறப்பு அன்னதான நிகழ்வு அம்பாறையில் நடைபெற்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 225 வது சிறப்பு அன்னதான நிகழ்வு அம்பாறையில் நடைபெற்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 225 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய விஷேட நிகழ்வு புதன்கிழமை அன்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று    கோளாவில் பகுதியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு-பிரான்ஸில் வசிக்கும்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த,செல்வன் சிவலோகநாதன் தினேஸ் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-26.04.2017 புதன்கிழமை அன்று ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் மாணவிகளின்  எதிர் கால நலன்கருதி  260 கிலோ எடை கொண்ட அரிசிமூடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இந்துநாதன் சிவநாதன் அவர்கள் -வேலணையிலிருந்து அம்பாறைக்குச் சென்று கலந்து கொண்டார்.

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானப்பணிக்கு-புலம்பெயர் மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர்.

தாயகத்தில் நாம் மேற்கொணடுவரும் அறப்பணி நிகழ்வுகளை-உடனுக்குடன்-எமது முகநூல் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.

முகநூல் முகவரி…

Siva Chelliah

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux