தீவகம் புங்குடுதீவு சர்வோதயத்தில் தயாரிக்கப்படும், வேம்பம்பூ வடகம் -விபரங்கள்  ,படங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு சர்வோதயத்தில் தயாரிக்கப்படும், வேம்பம்பூ வடகம் -விபரங்கள் ,படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம்  புங்குடுதீவில் அமைந்துள்ள  சர்வோதயத்தில் வேம்பம்பூக்களைப் பயன்படுத்தி  வேம்பம்பூ வடகம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேம்பம்பூ வடகம் என்பது எமது பாரம்பரிய உணவாகும்-  இதை உட்கொள்வதன் மூலம் குடலில் புழுத்தொல்லைகள் சீராகும். உடலில் உள்ள  கிருமிகள் அழிக்கப்பட்டு  உடல் நோய் எதிர்ப்புச் சக்தி பெறும்.

தாயகத்தில்  பங்குனி சித்திரை மாதங்களில் ஏற்படும் கடும் வறட்சியினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடும். அதை தவிர்ப்பதற்கு வேப்பம்பூ வடகம் சிறந்த நிவாரணியாகவுள்ளது.

எமது தேசத்தில் காணப்படும் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி விருத்தி செய்யும் நோக்கோடு- சர்வோதய தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும்   வேம்பம்பூ வடகத்திற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்புள்ளதாக தெரிய வருகின்றது.

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத்திருவிழா என்ற விழா சில ஹோட்டல்களில் நடைபெறுகிறதாம். யாழ்ப்பாண உள்ளூர்  உற்பத்திகளை பெருக்கி வளம் பெற அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகின்றோம்..

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux