தீவகம் வேலணையில்,சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விடிவெள்ளி என்னும் அமைப்பினை உருவாக்கி அதனூடாக சமூகத்திற்கு வேண்டிய அரிய நல்ல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகவும்-சமூக விரோதிகளுக்கு சாதகமாகவும் காணப்பட்ட அடர்ந்த பற்றைகள்- இயந்திரத்தின் துணையுடன் அண்மையில் வெட்டி அகற்றப்பட்டன -மேலும் இருளில் மூழ்கிக்கிடக்கும் இப்பகுதி வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வேலணை அராலிசந்தியிலிருந்து வங்களாவடி வரைக்கும் ஒரு தொகுதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு தற்போது ஒளிபகர்கின்றன.அத்தோடு பாடசாலைகளுக்கு உதவுவதுடன்- மேலும் வேலணை மருத்துவமனைக்கு உதவி என்று இவர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் தொடர்கின்றன.
இவற்றிக்கான நிதி உதவியினை-புலம்பெயர் மண்ணில் வாழும் ஊர் பற்றுள்ள மனிதர்கள் வழங்கி வருவதாக மேலும் அறிய முடிகின்றது.
காலத்தின் தேவையறிந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும்-இச்சமுதாயப்பணியினை-நாமும் மனதார வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.