தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படத் தொகுப்பு இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படத் தொகுப்பு இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2017  வியாழக்கிழமை  அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று   14-04-2017  வெள்ளிக்கிழமை  சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வரும் கண் கொள்ளாக் காட்சியினைக் காணத் திரண்டனர்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-எப்பெருமானின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

அனுசரணை வழங்கியவர்

தேர்த்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிய-பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பு வேலும் மயிலும்,அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் -அனைவருக்கும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news