யாழ். அல்லப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, ஜெர்மனி St. Ingbert ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உதயசூரியன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயச்சந்திரிகா(ஜெர்மனி), உதயசாந்தி(இலங்கை), உதயச்சந்திரன்(ஜெர்மனி), உசாந்தினி(ஜெர்மனி), உமாபாலினி, தர்சினி, தயாளன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷியந்தி, சுகிர்தன், கீர்த்தனன், சுதர்சன், துவாரகா, கீர்த்த்னா, கிஷோத், மிதுன், சரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
முருகதாசன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(டோகா), சுஜீவன்(ஜெர்மனி), சுபாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |