தீவகம் வேலணை துறையூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற மன விரக்தியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவகம் வேலணை துறையூரைச் சேர்ந்த செல்வி அருட்பிரகாசம்.ரேணுசா (வயது-17) என்ற மாணவியே பரிதாபகரமாக உயிர் துறந்ததாக தெரிய வருகின்றது.
வேலணை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் குறித்த மாணவி 2016ஆம் ஆண்டு டிசெம்பரில் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையில் தோற்றியிருந்ததாகவும்- பரீட்சைப் பெறுபேறு கடந்த வாரம் வெளியாகிய போது அவருக்கு ஏ 8பி பெறுபேறு வந்தது என்றும் ஆனால் அவர் எதிர்பார்த்த 8 ஏ பி பெறுபேறு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மனமுடைந்த மாணவி- நேற்றைய தினம் தாயும் தந்தையும் ஆலயத்துக்குச் சென்ற சமயம் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்- அவர் எழுதி வைத்த கடிதமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உடலம் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் – குறித்த மாணவியின் மூத்த சகோதரர்கள் இருவர் பல்கலைக்கழக மாணவர்களாக உள்ளனர் என்று தெரிய வருகின்றது.

