தீவகத்தில்  பிரபலங்கள் கலந்து கொண்ட-மண்கும்பான் பிள்ளையாரின் இறுவட்டு வெளியீட்டு விழா-முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகத்தில் பிரபலங்கள் கலந்து கொண்ட-மண்கும்பான் பிள்ளையாரின் இறுவட்டு வெளியீட்டு விழா-முழுமையான நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானை  போற்றிப்பாடிய  12 பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா -02.04.2017 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் விநாயகர் மணிமண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

எங்கள் தாயகக்கவிஞர்  புதுவை இரத்தினதுரை அவர்களின் ஆசி பெற்ற-எங்கள் தீவக கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களினால் எழுதப்பட்ட 12 பாடல்களை,தமிழக பிரபல பாடகர்களான சீர்காழி சிதம்பரம்-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் நித்திய ஸ்ரீ மகாதேவன் உட்பட 12 பேர் பாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“போக மறுத்த வீரகத்தி விநாயகர்”என்னும் தலைப்பில் இப்பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மண்கும்பானைச் சேர்ந்த, சமூக ஆர்வலரும்-புதிய நதியா நகை மாடத்தின் உரிமையாளருமாகிய,திரு சண்முகம் ஜெகதீஸ்வரன்( கண்ணன்) அவர்களே -இப்பணியினை  மிகச்சிறப்பாக நிறைவேற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

ஞாயிறு பி.பகல் நடைபெற்ற -வெளியீட்டு விழாவில்,பாராளுமன்ற உறுப்பினர்  திரு சிவஞானம் சிறிதரன் வலம்புரி ஆசிரியர் திரு விஜயசுந்தரம் மற்றும் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு-பிரபல தொழில் அதிபர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் வேலணை பிரதேச செயலர்-ஓய்வு நிலை அதிபர் வாமதேவன் உட்பட மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில்  கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது.

ஊடக  அனுசரணை….அல்லையூர் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux