தீவகத்தில் க.பொ.த.சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த-அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் க.பொ.த.சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த-அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்-விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் நேற்றைய தினம் வெளியாகிய- 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதரணப் பரீட்சை பெறுபேறுகளின் படி-தீவகத்தில் அமைந்துள்ள அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கடந்த வருடம்  க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோன்றிய 23  மாணவர்களில் 19 மாணவர்கள் சிந்தியடைந்து  க.பொ. த. உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும்-மேலும் கணித பாடத்தில் 18 மாணவர்கள் A பெறுபேறும்,மேலும் 2 மாணவர்கள் B பெறுபேறும் பெற்று  மொத்தம் 20 மாணவர்கள்  சித்தியடைந்துள்ளதானது  பாடசாலைக்கு பெருமை சேர்த்து நிற்பதோடு சாதனையாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இப்பெருமையை பெற்றுத்தந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களை நெறிப்படுத்திய அதிபர், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அல்லையூர் இணையத்தின் சார்பில்-வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux