வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் வேலண பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வு  26.03.2017 ஞாயிறு  காலை 10 மணிக்கு கோவிலின் பரிபாலன சபைத்தலைவர் திரு செ.பொன்னுச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கணக்கறிக்கை மற்றும் கடந்தகால செயற்பாட்டறிக்கை என்பவற்றை செயலாளர்திரு C.M.வரதராசா அவர்களும் பொருளாளர் திரு க.சதாசிவம் அவர்களும் சமர்ப்பித்து உரையாற்றினார்கள்.

திருப்பணி வேலைகள் முடியாத நிலையில் இரண்டு சபைகளுக்கும் ஒருவரே தலைவர் என்பதால் 2017ம் ஆண்டு ஐப்பசி மாதம் வரைக்குமான நடப்பாண்டுக்கு தற்போதைய பரிபாலன சபையையே தொடர்ந்து இருக்க வேண்டி- கடும் வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவெடுக்கப்பட்டு கால நீடிப்பை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இத்துடன் குருக்களை மாற்றுவதற்கும் (குறைந்த சம்பளத்தில் )தீர்மானிக்கப்பட்டது.

தற்போது இருக்கும் குருக்களுக்கும் உதவியாளருக்கும் மாதம் எழுபத்தி ஐந்தாபிரம் வழங்கப்படுவதாகவும் அதற்கு பொதுச்சபை அங்கீகரிக்கவில்லை-என்பதும் குறிப்பிடத்தக்கது.


மற்றும் கோயில் நிர்வாகத்தின் கீழ் சம்பளத்திற்கு பணிபுரியும் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு அவர்கள் பணிசெய்யும் நேரத்தில் சீருடையுடன் தான் இருத்தல் வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் பெறப்படுகின்ற பாதுகாப்பு ஊழியரின் மூலமே இனிவரும்காலங்களில் கோவில் காவல் காக்கப்படவேண்டுமெனவும் மேலும் ஒரு   தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதுடன்-
(மாலை.6மணிதொடக்கம்._மறுநாள் காலை 6மணிவரைக்கும் )
மேலும் கோவில் நிர்வாகத்தினால்- இப்பகுதி மாணவர்களுக்காக அறநெறிப் பள்ளியை ஆரம்பிக்கவேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில்  செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் 12மணிக்கு நிறைவடைந்தது.

Leave a Reply