அல்லையூர் இணைய இயக்குனரின் புதல்வி செல்வி சிவா எழிலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணைய இயக்குனரின் புதல்வி செல்வி சிவா எழிலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 220 வது தடவையாக -அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் புதல்வி செல்வி சிவா எழில் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு-26.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று- மிகவும் பின் தங்கிய  பகுதியான வடமாராட்சி கிழக்குப் பகுதியில் கேவில் முள்ளியான் என்னும் கிராமத்தில் வசிக்கும் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு வயிறாற  சமைத்து 280 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 28 பேருக்கு-பாடசாலை கொண்டு செல்வதற்கான  தண்ணீர் போத்தல்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பகுதியைச் சேர்ந்த,திரு த. திவ்வியன் அவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடமராட்சி கிழக்கில் அல்லையூர் இணையம் மேற்கொண்ட இரண்டாவது அறப்பணி நிகழ்வு இதுவாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux