வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வேலணை வங்களாவடி பகுதியில் திங்கட்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த-பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நடைபவனியில் , பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் .,சுகாதார வைத்திய அதிகாரிகள் வேலணை பிரதேச சபை செயலாளர் , உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ,பொது மக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.