கிழக்கு மாகாணத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காச்சலால் இதுவரை 14பேர் பலி-விபரங்கள் இணைப்பு!

கிழக்கு மாகாணத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காச்சலால் இதுவரை 14பேர் பலி-விபரங்கள் இணைப்பு!

கிழக்கு மாகாணத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காச்சலால் திருகோணமலையில் 6 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காச்சலால் 14பேர் மரணடைந்துள்ளனர். டெங்கு காச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை சண்முகாவித்தியால அஞ்சனா உதயராஜன் என்ற மாணவியே நேற்றிரவு உயிரழந்தார்.

கடந்த வாரம் பாண்டிருப்பை சேர்ந்த வள்ளியப்பன் நிலக்ஷன் ( 23 வயது) என்ற இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 4ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சமூக வைத்தியர் எஸ்.அருட்குமரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 2088பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிண்ணியாவில் மட்டும் 911பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்முனையில் 700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trinco pandiruppu

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux