யாழ் தீவகம் நெடுந்தீவு பங்குக்குட்பட்ட கச்சதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் விழா கடந்த சனிக்கிழமை மாலைஆரம்பமாகி-12.03.2017 ஞாயிறு காலை 6.00 மணிக்கு, திருச்செபமாலை இடம்பெற்றதுடன், 6.30 மணிக்கு, ஆயர், குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்று அழைத்து வரப்பட்டனர்.
காலை 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, புனிதருடைய திருச்சொரூப ஆசிர்வாதத்தைத் தொடர்ந்து திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஏழாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டதாகவும்-இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்து-தமிழ பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.