கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு-பகுதி 01 இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு-பகுதி 01 இணைப்பு!

qa (1)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  வருடாந்த  திருவிழா   11.03.2017 சனி மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர், அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன், ஆரம்பமானது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணியளவில் யாழ். குருவானார் ஜெயரஞ்சனால், திருச்செபமாலை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, திருச்சிலுவைப் பாதை சிந்தனைகள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நற்கருணைப் பாதை திருப்பலி, நற்கருணை ஆசிர்வாதம், புனிதருடைய திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இவ்வருடம் இலங்கையிலிருந்து  சுமார் 4 ஆயிரம் யாத்திரிகர்கள் வரை கலந்து கொண்டதோடு, இந்தியாவிலிருந்து எவரும் பங்குகொள்ளவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்திய மீனவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமை காரணமாக இவ்வருட திருவிழாவை இந்தியர்கள் புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கச்சதீவிற்கான  படகு சேவைகள், தலைமன்னார், நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஆகிய மூன்று இடங்களிலிருந்து, இடம்பெற்றதோடு, யாத்திரிகர்களுக்கான குடிநீர், உணவு மற்றும் ஏனைய வசதிகள்  கடற்படையினருடன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

qa (2) qa (3) qa (4) qa (5) qa (6) qa (7) qa (8) qa (9) qa (10) qa (11) qa (12) qa (13) qa (14) qa (15) qa (16) qa (18) qa (19) qa (20) qa (21) qa (22) qa (23) qa (24) qa (25) qa (26) qa (27) qa (28) qa (29) qa (30) qa (31) qa (32) qa (33) qa (34) qa (35) qa (36) qa (37) qa (38) qa (40) qa (41) qa (42) qa (43) qa (45) qa (46) qa (47) qa (48) qa (49) qa (50) qa (51) qa (52) qa (53) qa (54) qa (55) qa (56) qa (57) qa (58) qa (60) qa (61) qa (62)

Leave a Reply