சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு-08.03.2017 புதன்கிழமை வேலணைப் பகுதியில், யாழ் மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் மகளிர் தின சிறப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலணை வங்களாவடிச் சந்தியிலிருந்து புதன் காலை 9.30க்கு பாண்ட் வாத்திய இசையுடன் ஆரம்பமாகிய ஊர்வலம் வேலணைப் பிரதேச செயலகம் நோக்கி பயணித்து நிறைவடைந்தது.
குறித்த மகளிர் தின நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எழுச்சிக் கோசங்கள் தாங்கிய பதாதைகளுடன் சென்று பின்னர் தீயில் போட்டு எரித்ததை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.