அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, ஆறு பிள்ளைகளின் தாயான திருமதி ஜெயாளன் ராஜேஸ்வரி (பிள்ளை) அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக -யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரு தினங்களின் பின் 01.03.2017 புதன்கிழமை அன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.03.2017 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில்,திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் உடல் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்…நிழற்படப்பதிவு