தீவகம் மண்கும்பான் சமூக அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும்-அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வும் -மகா சிவராத்திரி தினமான 24.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மண்கும்பான் முருகன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள-அமரர் லீலாவதி சின்னத்தம்பி ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரம்மசாரி ஜாக்ரத் சைதன்யா அவர்கள் வருகை தந்து ஆசி உரை வழங்கி ஆரம்பித்து வைத்ததுடன் மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அறநெறி வகுப்புக்களுடன் மேலும் கணனி மற்றும் தொழில்சார் வகுப்புக்களும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.