திரு சதாசிவம் கைலாயபிள்ளை |
(ஓய்வுபெற்ற அதிபர்- வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்) |
மண்ணில் : 17 யூலை 1924 — விண்ணில் : 11 பெப்ரவரி 2017 |
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தையை வசிப்பிடமாகவும், சுண்டுக்குழி கச்சேரி கிழக்கு ஒழுங்கையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கைலாயபிள்ளை அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசலெட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயதேவி(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்), சத்தியதேவி, காலஞ்சென்ற சிறிதேவி, நிர்மலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகம், மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மூத்ததம்பி(கனடா), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெகநாதன்(ஓய்வுபெற்ற பிரதி விவசாயப் பணிப்பாளர்) குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அன்னலெட்சுமி, சொர்ணலெட்சுமி, செல்வலெட்சுமி(கனடா), சண்முகவடிவு ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிருந்தாபன்(பரி. யோவான் கல்லூரி), கோகுல்(பிரான்ஸ்), நிவேத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|