இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் எழுவை தீவில் (10.02.2017 )வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
காற்றாலை, சூரிய சக்தி மற்றும் டீசல் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம், யாழ்.தீவகம் எழுவைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கமும் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சக்தி நிலையம், இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையமாகும்.
ரூபா 187 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்சக்தி நிலையத்தினை மின்சக்தி மீளுருவாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
குறித்த மின்நிலையத்தின் மூலம் உருவாக்கப்படும் மின் அலகு ஒன்றிற்கு ரூபா 9.14 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், மற்றும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத் தலைவர்கள், உட்பட இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய முகாமையாளர், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிழற்பதிவு -முகநூல் நண்பர்கள்…