கிளிநொச்சி பொன்நகர் மத்தியில் வசிக்கும்-திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கான உதவியாக,70 ஆயிரம் ரூபா பெறுமதியான (செலவு உட்பட) கறவை மாடு ஒன்று தைப்பூஷ தினமான 09.02.2017 வியாழக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது .
திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்கள் கொடிய யுத்தத்தில் கணவனை இழந்ததுடன் மேலும் வலுவிழந்தவராகவும், ஒரு கால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இவரின் புதல்வன் விஷேட தேவைக்குட்பட்டவராகவும் காணப்படுவதனால்,இவரை தெரிவு செய்து இவரின் குடும்ப வருமானத்திற்கென கறவை மாட்டினை வழங்கினோம்.
இக்கறவை மாடு வழங்கும் நிகழ்வில்,பொன்நகர் கிராம சேவையாளர் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அலுவலகர் ஆகியோருடன் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.
நிதி வழங்கிய கருணை உள்ளம்…..
இக்கறவை மாடு வழங்கியதற்கான நிதியினை, பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,கருணை உள்ளம் கொண்ட குடும்பத்தலைவி ஒருவர் வழங்கியிருந்தார்.அவருக்கு திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் சார்பிலும் நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களுக்கு வழங்கப்பட்ட கறவை மாடு-ஒரு நாளைக்கு 5 லீற்றர் வரை பால் தரக்கூடிய இனம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் வரும் சித்திரை மாதம் கன்று போடவுள்ளதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.