மண்டைதீவில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் உல்லாசக் கடற்கரைக்கு சோலர் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!

மண்டைதீவில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் உல்லாசக் கடற்கரைக்கு சோலர் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!

மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கடற்கரைக்குச் செல்வதற்காக,மண்டைதீவு பிரதான வீதியிலிருந்து  புதிய வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் மேலும்  இவ்வீதியின் இரு மருங்கிலும் சோலர் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

16650887_1844838299131226_1222990427_o

16521861_1844838379131218_1881843964_n 16523653_1844838205797902_1282700169_o 16523987_1844838282464561_2108071691_o (1) 16586576_1844838209131235_2085638576_o 16651725_1844838382464551_1628182227_n 16650623_1844838192464570_1254515028_o 16651225_1844838275797895_797381750_o 16667540_1844838325797890_1582640332_o

யாழ் நகருக்கு மிக அண்மையாக அமைந்துள்ள – தீவகத்தின் தலைத் தீவாக விளங்கும் மண்டைதீவின் மேல் அரச அதிகாரிகளின் பார்வைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நகருக்கு அண்மையாக அமைந்துள்ளதாலும் – போக்குவரத்துக்கு இலகுவாக இருப்பதனாலும்,அரச அதிகாரிகள் மண்டைதீவுப் பகுதியை,தெரிவு செய்திருப்பதாக மேலும்  அறிய முடிகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு  முன்னர்   மண்டைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட- இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் குழு- மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ததாகவும்- நிர்மாணப்பணிகள் இவ்வருடத்திற்குள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வடமாகாண அமைச்சினால், மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் நவீன உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் வேகமாக  முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரிய வருகின்றது. இந்த மாதக்கடைசியில் கடற்கரை திறந்து வைக்கப்படவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது.

இவற்றுக்கு வேண்டிய பெருந்தொகையான உபகரணங்கள் மண்டைதீவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

யாழ் வலம்புரி  பத்திரிகையில்,  வடக்கில் அமைக்கப்படவுள்ள  சிறுவர் மருத்துவமனையை,மண்டைதீவில் அமைப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது என்ற செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

இனி வரும் காலங்களில்-தீவகத்தின் தலைத்தீவாகிய மண்டைதீவு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவும்-உல்லாச புரியாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்கள் அமையப் பெற்றுள்ளதாகவே நம்பப்படுகின்றது.

16492282_1842551239359932_659892702_o16466248_1842551209359935_214783239_o16466365_1842551276026595_300299359_o16466439_1842551169359939_1962291832_o16466637_1842551079359948_1758442129_o16466576_1842551156026607_1531274780_o16491251_1842551129359943_1209011700_o16443832_1842551162693273_532732745_o16491364_1842551022693287_2008163540_o16491656_1842551016026621_217577720_o16492387_1842551146026608_1340148507_o16491702_1842551142693275_622436602_okirikat-4kirikat-3kirikat-5kirikat-2

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux