தீவகம் மண்கும்பான் சமூக அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும்-அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வும் வரும் தைப்பூஷத்தன்று 09.02.2017 வியாழக்கிழமை 2.30 மணியளவில்,மண்கும்பான் முருகன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட-அமரர் லீலாவதி சின்னத்தம்பி ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மண்கும்பான் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்-மண்கும்பான் சமூக அபிவிருத்தி சங்க அங்குரார்ப்பண ஏற்பாட்டாளர்கள்.
அங்குரார்ப்பண மற்றும் அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வுகளை முன்னிட்டு- இளைஞர்களால்,ஆலய சுற்றாடல் பகுதிகள் சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.