யாழ்.வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் திருமதி கே. சிறீஸ்கந்தராஜா தலைமையில் கடந்த திங்கட்கிழமை (30.01.2017) அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களும்- சிறப்பு விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்களும்- மற்றும் வேலணை கலைவாணி தனியார் கல்வி நிலைய உரிமையாளர் திரு சிவலிங்கம் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரமுகர்கள் விளையாட்டு போட்டிகளை பார்வையிடுவதையும் மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்வதையும் வெற்றிபெற்ற இல்லம் மற்றும் வீர வீராங்கணைகளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்கள் பரிசில்களை வழங்குவதனையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.