அல்லையூர் இணையத்தினால், 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று – தீவகத்தில் மண்டைதீவு,அல்லைப்பிட்டி,வேலணை ஆகிய பகுதிகளில் வசிக்கும் -இரு வலுவிழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும்-மேலும் மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்- வலுவிழந்த ஒரு மாணவியின் கல்விக்கான உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
கீழே படங்கள் விபரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
மண்டைதீவில்…
மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்விகற்கும் நடக்க முடியாத-மாணவியான த.வானுசா என்ற மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாக்களில் கற்பதற்கான உதவி வழங்கப்பட்டது. மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் வைத்து வழங்கிய இந்நிகழ்வில்-மகா வித்தியாலய அதிபர்-மண்டைதீவு பங்குத்தந்தை மற்றும்அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதி வழங்கியோர்…
01-திரு திருமதி சாந்தி சிவா-(அல்லைப்பிட்டி-கொலண்ட்)
02-திரு முகுந்தன் குலசிங்கநாதன்( மண்டைதீவு-லண்டன்)
03-திரு சிவகுமார் சீவரத்தினம்( மண்டைதீவு-பிரான்ஸ்)
இவர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லைப்பிட்டியில்…..
அல்லையூர் இணையத்தினால், 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று தீவகத்தில் மண்டைதீவு,அல்லைப்பிட்டி,வேலணை ஆகிய பகுதிகளில் வலுவிழந்த இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும்-வலுவிழந்த ஒரு மாணவியின் கல்விக்கான உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் வசிக்கும்-திரு திருமதி நகுலேஸ்வரன் அருள்மீரா தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவியாக 30 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில் கோழிக்கூடு மற்றும் 3 மாதங்களுக்குப் போதுமான கோழித்தீன் மற்றும் உபகரணங்கள் எனபன வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில்-அல்லைப்பிட்டி பங்குத்தந்தை மற்றும்அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் மற்றும் பொது அமைப்புக்களின் சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிதி வழங்கியோர்…
01-திரு திருமதி சாந்தி சிவா-(அல்லைப்பிட்டி-கொலண்ட்)
02-திரு முகுந்தன் குலசிங்கநாதன்( மண்டைதீவு-லண்டன்)
03-jதிரு சிவகுமார் சீவரத்தினம்( மண்டைதீவு-பிரான்ஸ்)
இவர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வேலணையில்…..
அல்லையூர் இணையத்தினால், 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று தீவகத்தில் மண்டைதீவு,அல்லைப்பிட்டி,வேலணை ஆகிய பகுதிகளில் வலுவிழந்த இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும்-வலுவிழந்த ஒரு மாணவியின் கல்விக்கான உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
வேலணை செட்டிபுலத்தைச் சேர்ந்த,,இரண்டு கண்களும் பார்வையற்ற திரு சிற்றம்பலம் அருட்செல்வன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான கடற்றொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்தின் வைத்து -பிரதேச செயலரின் முன்னிலையில்-அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்ப உறுப்பினரினால் வழங்கி வைக்கப்பட்டது.