அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்கு 30 ஆயிரம் ரூபாக்களை வழங்கிய-கொலண்டில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு திருமதி சிவா-பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் சிந்துஜன் மற்றும் புதல்வி சிந்து ஆகிய இருவரின் பிறந்த நாள் விழா கடந்த 07.01.2017 அன்று கொலண்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமது பிள்ளைகளின் பிறந்த நாளை முன்னிட்டு -அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் அறப்பணிகென 30 ஆயிரம் ரூபாக்களை கருணையோடு வழங்கியிருந்தனர்.
இவர்கள் இருவரும்- அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்தவர்களும்-ஜெர்மனியில் வசிப்பவர்களுமாகிய, திரு திருமதி சுந்தரம்பிள்ளை-புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளைகளேயாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வன் சிந்துஜன்-செல்வி சிந்து ஆகிய இருவருக்கும் – அல்லையூர் இணையத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.