வேலணை கிழக்கைச் சேர்ந்தஅமரர்களான திரு திருமதி காங்கேசு பாக்கியம் தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

வேலணை கிழக்கைச் சேர்ந்தஅமரர்களான திரு திருமதி காங்கேசு பாக்கியம் தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் அறப்பணியின் தொடர்ச்சியாக,வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர்கள்  திரு திருமதி கந்தர் காங்கேசு , பாக்கியம் காங்கேசு  தம்பதியினரின்  நினைவாக -முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் அமைந்துள்ள  இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு 20.01.2017 வெள்ளிக்கிழமை மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது. 

அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இ.சிவநாதன் அவர்கள் நேரடியாக முல்லைத்தீவுக்குச் சென்று இச்சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் பணியின் 191வது தடவையாகவும்-முல்லைதீவு புதுக்குடியிருப்பு இனிய வாழ்வு இல்லத்தில் முதற்தடவையாகவும் இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர் கந்தர்  காங்கேசு அவர்கள்-வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தின் ஸ்தாபகராகவும்,அதிபராகவும்  பணியாற்றி-இப்பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமாக  திகழ்ந்து மறைந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமரர்கள்  திரு திருமதி காங்கேசு பாக்கியம் தம்பதிகளின் ஆத்மா   சாந்தியடைய -வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மனை   வேண்டி நிற்கின்றோம்.

a e (1) e (2) e (3) ee (1) ee (2) ee (3) ee (4) ee (5) ee (6) ee (7) ee (8) ee (9) ee (10) ee (11) ee (12) ee (13) ee (14) ee (15) ee (16) ee (17)

Leave a Reply