யாழ் தீவகம் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தனது முதல் கடல் பயணத்தை 20.01.2017 வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது- நெடுந்தாரகை கப்பல் …. 150Million ரூபாக்கள் பெறுமதியான- இக்கப்பலை வடக்கு மாகாண முதலமைச்சர் ஒழுங்குபடுத்தியுள்ளார்.
நெடுந்தாரகையின் முதல் பயண நிகழ்விற்காக ஆஸ்திரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளின் உதவியுடன் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் போக்குவரத்திற்காக 150 மில்லியனில் இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினில் 80 இருக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட படகிற்கான மாலுமிகளிற்காகவும் நெடுந்தீவு இளைஞர்களில் ஐவரிற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு தற்போது வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்துள்ள நெடுந்தாரகைக்காக முதல் ஓர் ஆண்டிற்கான முழுமையான காப்புறுதி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் காப்புறுதிப்பணம் 36 லட்சம் ரூபாவாகும்.
நெடுந்தாரகையின் முதல் பயணசேவையினை வட மாகாண ஆளுநர் , வட மாகாண முதலமைச்சர் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் , இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வெள்ளிகாலை ஆரம்பித்துவைத்தனர்
இவ் விழாவில்உள்ளுராட்சி அமைச்சர் சைபர் முஸ்தபா, விஜயகலா மகேஷ்வரன் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டதுடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.