வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-வைகுண்ட ஏகாதசியன்று 09.01.2017 செவ்வாய்கிழமை-மட்டக்களப்பு பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
திரு.திருமதி.கணபதிப்பிள்ளை மாணிக்கம் குடும்பத்தினர்,
பிரான்ஸ்.
ஊடாக!
அல்லையூர் இணையம்
அன்புள்ளம் கொண்ட ஐயா / அம்மணி !
நன்றியும் நல்வாழ்த்தும்
எமது பராமரிப்பிலுள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 2017.01.09ஆம் திகதி திருமதி.கணபதிப்பிள்ளை மாணிக்கம் நினைவு தினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கியமைக்கு எமது மனமார்;ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இதற்கான புகைப்படங்கள்> பற்றுச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இல்லத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து திருமதி.கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று விஷேட பிரார்த்தனை செய்தார்கள்.
பெற்றோரை இழந்த ஏழைக் குழந்தைகளுக்கான சேவைகள் தடையின்றி நடைபெற தாங்கள் செய்கின்ற உதவி ஒத்தாசைகளை நினைக்கும்போது எமது இதயம் நன்றிப்பெருக்கால் பூரிப்படைகின்றது.
தங்களைப் போன்ற தர்ம சிந்தனை கொண்ட அன்பர்களின் தன்னலமற்ற உதவிள் மூலமே எமது சமுதாயத்தில் தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு எம்மால் பணிசெய்யக் கூடியதாக உள்ளது.
இக் குழந்தைகள் கல்வி பெற்று ஒழுக்க சீலராக எதிர்காலத்தில் சமுதாயத்தில் நற்குடி மக்களாக வாழ்வதற்கு தங்களின் அன்பும், அனுதாபமும், உதவியும், ஒத்துழைப்பும் என்றும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
மிகுந்த புண்ணியம் தரவல்ல இப் புனித பணிக்கு தாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
சமூகப் பணியில்,
திருமதி.சிவசுந்தரி பிரபாகரன்,
இணைப்பாளர்.
—
Kind Regards,
Mrs.Sivasunthary Prapakaran
Co-Ordinator,
Thilakavadiyar Girls Home,
Thiruppalugamam,
Batticaloa,
Sri Lanka.